திண்டுக்கல் நவ, 19
கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவுத் துறையில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கோவையில் நடைபெறும் கூட்டுறவு சங்க கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.