கிருஷ்ணகிரிநவ, 17
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை வட்டாச்சியர் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேல்பட்டி அருகே உள்ள தர்மராஜா நகர் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும் காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது வட்டாச்சியர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.