Director M Sasikumar at the Thalaimuraigal Team Press Meet showing their National Award for 2013
Spread the love

சென்னை நவ, 16

இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘காரி’.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காரி’. இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் காரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *