தஞ்சாவூர் நவ, 16
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்றார்.
பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதாரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா ,கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.