Spread the love

மும்பை நவ, 16

பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார். இவர் நடிக்கவிருந்த சாம்பியன்ஸ் திரைப்படத்தில் வேறு நடிகரை தேர்வு முடிவு செய்துள்ளார். பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். தற்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *