கடலூர் நவ, 16
கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவு பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 13 பேர், மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் சென்றதில் 23 பேர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 100 பேர், சீட் பெல்ட் அணியாத சென்ற 13 பேர் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 216 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து கொண்டும், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்ற வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தி உள்ளார்.