கீழக்கரை ஆகஸ்ட், 6
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி தலைவர், நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ4,10,000 லட்சத்திற்கு சிறுகோபுர மின் விளக்கு அமைப்பதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக நமது 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது மீரான் அலி மற்றும் 9-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நசீருதீன் வார்டு பொதுமக்களின் சார்பாக ரூ.1,37,000 யை நகர்மன்ற தலைவரிடம் காசோலையாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் மீரா அலி மற்றும் நகராட்சி உதவியாளர் தமிழ்செல்வன் உடனிருந்தனர்கள். மேலும், சிறு கோபுர மின்விளக்கு ரகுமானியா நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது என தகவல் தெரிவித்தனர்.