கீழக்கரை ஆகஸ்ட், 7
பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக முதல்வரால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டத்தில் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டு விட்டது எஞ்சி நிற்கும் மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என சுற்றுப்புற ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக பனைமரம் வெட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி தலைவர் திருக்குமரன் வட்டாச்சியருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல் முருகன், துணை வட்டாச்சியர் பழனிக்குமார் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மடக்கி பிடித்து விசாரணைக்காக கீழக்கரை வட்டாசியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் உடனடி நடவடிக்கை எடுத்த கீழக்கரை வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் செயல் குறித்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.