தொண்டி ஆகஸ்ட், 7
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தாமோதரன் பட்டினம், வட்டானம், எம்.ஆர்.பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 70-க்கும் மேற்பட்ட நாட்டு வல்லங்கள், சுமார் 150- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in