திருவண்ணாமலை நவ, 15
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26 ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6 ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. மேலும் கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் அறநிலை துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக் குமார், தி.மு.க. மருத்துவ அணி துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.