ராசிபுரம் நவ, 15
கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைப்பாளையம் ஏரி, 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட குருக்கபரம் ஏரி, பட்டணம் ஆலந்தூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பி உள்ளன.
இந்த நிலையில் ராசிபுரம் தாலுகா முழுவதும் நல்ல மழை பெய்ததன் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகின்றன.
இதனால் பயிரிடப்பட்ட வெங்காயம், சோளம், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, நெல் உள்பட பல்வேறு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வயல்களில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் புகுந்ததால் ரூ.5 கோடி மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், இதனால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.