நாமக்கல் நவ, 13
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு செயலாளர் அய்யந்துரை தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம் உள்ள வரவு செலவு கணக்குகளை முறையாக ஒப்படைக்க வேண்டும். கல்லூரி முதல்வரை தலைவராகக் கொண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மழையில் குடை பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.