சென்னை நவ, 13
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகப்பில் மளிகை பொருட்கள் தரம் குறித்து புகார் என வாய்ப்புள்ளதால் ரொக்கமாக வழங்க ஆலோசிக்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பணமாக வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.