செங்கல்பட்டு நவ,13
திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறப்பவர்களை பழங்காலத்து முறையில் விறகுளால் எரியூட்டப்பட்டு, தகனம் செய்வதால் கால தாமதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது.
இதுதொடர்பாக திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின் பார்வைக்கு பேரூராட்சி தலைவர் யுவராஜ் கொண்டு சென்றார்.
அதையடுத்து 4வது வார்டு இந்திரா நகரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பார்வையிட்டார். திருக்கழுகுன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், தலைவர் யுவராஜ், துணைத்தலைவர் அருள்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.