வேலூர் நவ, 12
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், மாவட்ட தலைமை பொறியாளர் ஸ்ரீதர், துணை இயக்குனர் ஸ்டீபன், பேரணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, தோட்டக்கலை அலுவலர் சுபாஷ் சந்திர போஸ், வேளாண்மை அலுவலர் சத்திய லட்சுமி, உதவி அலுவலர் செல்வன், வேளாண்மை, தோட்டக்கலைதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.