சென்னை நவ, 12
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நான்கு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.