திருவாரூர் நவ, 11
திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.
இதனால் பொதுமக்கள் வீடுகள் இல்லாமல் அவதி பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாரிமுத்து, தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.