ராணிப்பேட்டை நவ, 9
வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் தயார் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள பழைய நூலக கட்டிடம் பழுத டைந்துள்ளதை பார்வை யிட்டு கட்டிடத்தை அகற்றி புதியக் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவருக்கு கேட்டுக் கொண்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான வசதிகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்தார்கள்.
அப்போது மருத்துவர்கள் பற்றாக்குறைவு உள்ளது என தெரிவித்தார்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளிப்புற நோயா ளிகள் பிரிவு கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிடத்தில் மழை தண்ணீர் தேங்காத வண்ணம் மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தினை பார்வை யிட்டு 25 ஆண்டுகள் முடிந்த கட்டிடத்தை அகற்றிட கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அங்கு கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஒன்றிய சரஸ்வதி குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.