திருவண்ணாமலை நவ, 8
சந்திர கிரகணத்தின் போது மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்களில் நடை சாத்தப்படும். அதே நேரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வழக்கம்போல பூஜைகள் தொடரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காரணம் திருவண்ணாமலை பஞ்சபூதங்களின் அக்னி ஸ்தலமாகும். அக்னி ஸ்தலங்களில் கிரகணங்களின் போதும் நடை திறந்திருக்கும்.