நெல்லை ஆகஸ்ட், 5
நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல்கமீது, ரம்ஜான் அலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாளை ஆரோக்கியநாதபுரம், வி.எம்.சத்திரம், சாந்திநகர், இந்திராநகர் ஆகிய இடங்களிலும் புதிதாக நகர்நல மையம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அடிக்கல் நாட்டினார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in