கர்நாடகா நவ, 5
பாஜக முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் புகைப்படம் கொண்ட 500 கோடி ரூபாய் நோட்டை கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஒப்பந்தம் தொடர்பாக சந்தோஷ் பட்டேல் தற்கொலை வழக்கில் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் பெற்றதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாஜக பேரம் பேசுவதை விமர்சிக்கும் வகையிலும் காங்கிரஸ் இந்த நோட்டை வெளியிட்டுள்ளது.