திருப்பூர் நவ, 4
மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் ஆகும். கோட்டை கலால் வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் திருப்பூர் மாவட்ட சிறைச்சாலை அருகில் அவை தரையில் ஊற்றி அழிக்கப்பட்டன. காலி பாட்டில்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த கள்ளத்தனமான விற்பனையில் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் திரு பிரகாஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக இந்த கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளை காவல் ஆணையர் பாராட்டினார்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.