சென்னை நவ, 4
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயார் தயாளு அம்மாளை பார்ப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் வந்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, வேலு உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.