பெங்களூரு நவ, 3
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நவம்பர் மாதம் 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
மேலும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் தொடங்கியது. தொடக்க விழா பெங்களூரு அரண்மனை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவடைகிறது.