சென்னை நவ, 5
ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஆரஞ்சு பாக்கெட் பால் ஒரு லிட்டர் ரூபாய் 60, அரை லிட்டர் ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாலேயே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.