Spread the love

திருப்பூர் நவ, 1

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பல்லடம் ஆனந்தன் , உடுமலைப்பேட்டை உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு விஜயகுமார் , மடத்துக்குளம் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *