சென்னை நவ, 1
கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கும், நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகையில் மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.