Spread the love

புதுச்சேரி அக், 31

புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களால் 1954ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுவை முழுமையான விடுதலையை பெற்றது.

மேலும் புதுவை விடுதலை போராட்டத்தை நினைவு–கூறும் இந்த நாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்போம். இயற்கை வளமும் ஆன்மீக நலமும் நிறைந்த புதுவை மாநிலம் பிரெஞ்சு-இந்திய கலாச்சாரத்தின் பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரிந்து மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *