சென்னை அக், 30
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, செய்தி தொடர்பாளர் இளங்கோவன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, தாயகம் கவி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கே.கே.நகர் தனசேகரன், செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தும், படத்துக்கு மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.
மேலும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, நடிகர் எஸ்.வி.சேகர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பல்வேறு தேவர் சமூதாய அமைப்புகள் சார்பிலும் ஏராளமானோர் திரண்டு வந்து நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், தஞ்சை ராமநாதன், டாக்டர் வெங்கடேசன், நாகேஷ் ராஜன், தி.நகர் விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டன