Spread the love

சென்னை அக், 28

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து ஒரே ஹீரோயின்களுடன் நடித்து வந்ததால் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அண்மையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருந்தார். தனது குடும்பத்தால் பார்த்த பெண் நர்மதா உதயகுமாரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஹரிஷ் கல்யாண் அறிவித்தார். அதேபோல் இன்று கோலாகலமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடந்துள்ளது.

சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் பிரம்மாண்டமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடந்துள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தையே அலங்கரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்க்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *