சிட்னி அக், 27
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்களின் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.