சென்னை அக், 26
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. புதிய வாகன அபராதத் தொகை வருகிற 28 ம் தேதிக்கு மேல் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார்.
நேற்று இரவு காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ”வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத் தொகை இன்று முதல் வசூலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.