தென்காசி அக், 25
கீழப்பாவூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஒட்டு மொத்த தூய்மைப்பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் இசக்கிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி தலைவர் ராஜன் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்து பேசினார்.