டெல்லி அக், 20
மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ 1,977 கோடியில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும் இதுவரை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என ஆர்டிஐ மூலம் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2026 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி குறித்து கூற இயலாது என தெரிவித்துள்ளது.
இதனால் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்றே தெரிகிறது.