Spread the love

சென்னை அக், 18

அஜித்குமார் என்றாலே கார் பைக் ரேஸ் கலக்குபவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் சென்றார்.

மேலும் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார்சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை வருடம் மோட்டார்சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *