Spread the love

அரியலூர் அக், 15

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbariyalur.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே 14-11-2022 அன்று மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு இட இதுக்கீடு விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.drbariyalur.net வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையைக்காணவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *