Spread the love

புவனேஷ்வர் அக், 11

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் இன்று முதல் 30 ம் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டி கடந்த 2020-ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அப்போது ரத்து செய்யப்பட்ட இந்த போட்டியை மீண்டும் இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பு வழங்கியது. இன்று ஆரம்பிக்கும் இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *