கடலூர் ஆகஸ்ட், 4
கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலக்கரை பகுதியில் காவல்துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் துணை காவல்துறை ஆய்வாளர் கணபதி மற்றும் போலீசார் பொது மக்களிடம் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைபடும். ஆகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தயக்கம் இன்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
இதேபோல் புதுப்பேட்டை, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை, வடலூர், விருத்தாசலம், கம்மாபுரம், பெண்ணாடம், திட்டக்குடி, மந்தாரக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய போலீஸ் நிலைய எல்லை பகுதிகளிலும் அந்தந்த போலீசார், இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#Vanakambharatham #police #Kadalur #news