கள்ளக்குறிச்சி அக், 8
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்படி நிலத்தை அளவீடு செய்வதற்காக தனி நபர் மற்றும் வருவாய்துறையினர் நேற்று வந்தனர். இதையறிந்து ஆத்திரம் அடைந்து அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.