கள்ளக்குறிச்சி அக், 12
கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலையில் உள்ள விளை நிலங்களில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுமார் 900 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கைப்பற்றி, அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த செல்வராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.