காஞ்சிபுரம் அக், 7
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரிசை ஊராட்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.