மும்பை அக், 6
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாலர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி இன்னும் மாற்று வீரரை அற்விக்கவில்லை. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பையில் பங்கேற்க இந்திய அணி இன்று மும்மையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.