ஐதராபாத் அக், 5
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், விஜயதசமி தினமான இன்று புதிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.