மும்பை அக், 4
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 ம்தேதி முதல் நவம்பர் 13 ம்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம் காரணமாக விலகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி 2 தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.