வேலூர் அக், 3
வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை கட்டணம் அதிகம் நிர்ணயித்து வசூலிப்பதாகவும், அதனால் வாடிக்கையாளருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆட்டோக்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நடந்தது. போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அவர் கூறுகையில், மது குடித்துவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ ஓட்டினால் அவர்களை கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது என்றனர்.