புதுடெல்லி அக், 1
கடந்த 2020 ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன.
இவை தவிர சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் கலைஞர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.