ஈரோடு செப், 29
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், சட்ட மன்ற உறுப்பினர் கள் கணேசமூர்த்தி, வெங்கடாசலம், சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் முருகேசன், சந்திரசேகர், பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.