நெல்லை ஆகஸ்ட், 3
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழக பேரிடர் மீட்பு குழு சார்பில் ஜெயராணி தலைமையில் 30பேர் கொண்ட மீட்பு குழுவினர் அம்பை வந்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், அச்சப்படாமல் இருக்கவும் அம்பை காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில், அம்பை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் மீட்பு குழுவினர் அம்பை பூக்கடை பஜாரில் இருந்து பாரத் ஸ்டேட் வங்கி வரை நடைபயணமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.