Spread the love

திருப்பத்தூர் செப், 27

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் அதன்வழியாக செல்லும்பாதை அடைக்கப்படுகிறது. எனவே இந்தவழியை இதுவரை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்க தடையில்லா சான்று கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மணு அளித்தனர்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாற்றுப்பாதை அமைப்பதற்கு நீர்நிலை புறம்போக்கு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, வட்டாட்சியர் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *