சென்னை செப், 27
ஆயுதபூஜை விழா அடுத்த மாதம் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5 ம்தேதி விஜயதசமி. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள், வருகிற 30 ம் தேதி முதல் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். இதனால் பஸ், ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. எனவே பஸ், ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனா்.
ஆனால் தொடர் விடுமுறையையொட்டி உள்நாட்டு விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது பயணிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.